கரூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரூர் இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இதன் வடக்கில் நாமக்கல் மாவட்டமும் கிழக்கில் திருச்சி மாவட்டமும் தென்பகுதியில் திண்டுக்கல் மாவட்டமும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் உள்ளன.
[தொகு] வரலாறு
கரூர் பண்டைய காலங்களில் முக்கியமான வணிகத்தலமாக விளங்கியது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் கரூரைக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.