எண்ணெய் விளக்குகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பலவிதமான எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள்,
- தாவர எண்ணெய்கள்
- விலங்கு நெய்கள்
- மண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள்.
என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை.
எண்ணெய் விளக்குகள் ஒளியை வழங்குவதற்காகவும், அலங்காரத்துக்காகவும் நீண்ட காலமாகப் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் என்பன விளக்குகளை உருவாக்குவதற்கு மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும்.
- அகல் விளக்கு
- குத்து விளக்கு
- தூண்டாமணி விளக்கு
- சட்ட விளக்கு
- பாவை விளக்கு
போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழைத்தேச நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.