உலோகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேதியியலில் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
[தொகு] உலோகங்களின் (அல்) மாழைகளின் பண்புகள்
- உலோகம் அல்லது மாழை என்று சொல்லும் பொருட்களை தட்டியும் கொட்டியும் நீட்டிக்கவோ தகடாக்கவோ முடியும்.
- தேய்த்து மழமழப்பாக்கி பளபள என்று ஒளிவிடச் செய்ய முடியும்.
- (பொதுவாக) வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்த வல்லவை
- பெரும்பாலானவை நாம் வாழும் அறையின் வெப்பநிலையில் திண்மப்பொருளாக இருக்கும் (பாதரசம் என்னும் ஒரு மாழை மட்டும் நீர்ம நிலையில் இருக்கும்)
- அடர்த்தி மிக்கவை
- உயர்ந்த வெப்பநிலையில் உருகும் தன்மை வாய்ந்தவை