இராமானுசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறீனிவாச இராமானுசன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தையே வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புது கணித தேற்றங்களை கண்டுபிடித்தார்.
இராமானுசத்தின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாறிவந்தனர். தாய்வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடி்த்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித இயல் இதழ் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
ஜி. ஹெச். ஹார்டி மற்றும் ஜே. ஈ. லிட்டில்வுட் தொடர்பு.
[தொகு] கேம்பிரிட்ஜ்சில்
[தொகு] பட்டங்கள்
- Fello of Trinity
- FRS
[தொகு] இராமானுசனின் கண்டுபிடிப்புகள்
[தொகு] உசாத் துணை நூல்கள்
- Collected Papers of Srinivasa Ramanujan ISBN 0821820761
- The Man Who Knew Infinity: A Life of the Genius Ramanujan by Robert Kanigel ISBN 0671750615
- The Ramanujan Journal