வேலுப்பிள்ளை பிரபாகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (புகைப்படம்) (பிறப்பு நவம்பர் 26, 1954, வல்வெட்டித்துறை) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் தமிழ் புதுப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவரது ஈடுபாடு கூடுதலாகி வந்த சமயத்தில், யாழ்ப்பாண மாநகரத் தந்தை படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976ல் தமிழ் புதுப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரை தேசியத் தலைவராக மதிக்கிறார்கள் என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாட்டு அரசுகளால் அவர் ஒரு தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
[தொகு] மேலும் படிக்க
-
- M.R.Narayan Swamy. (2003). Inside an Elusive Mind - Prabhakaran. USA: Literate World, Inc.
- Prabhakaran - A Leader for All Seasons - Glimpses of the Man behind the Leader[1]
[தொகு] வெளி இணைப்புகள்
-
- பிரபாகரன் குறித்து T. சபாரத்தினம்
- The Pirabakaran Phenomenon by Sachi Sri Kantha
- www.tamilnation.org தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல்
- www.eelamweb.com தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல்
- பிரபாகரனுடன் பிபிசி நேர்காணல் (27.04.95)
- பிரபாகரனுடன் பிபிசி நேர்காணல் (13.09.94)
- முதல் நேர்காணல்
- புகழ்பெற்ற தமிழர்கள் - வேலுப்பிள்ளை பிரபாகரன்