ரணில் விக்கிரமசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரனில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். 2002 ல் நடைபெற்ற தேர்தலில் இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அந்த பாரளுமன்றம் முன்னாள் அதிபர் சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலிலும், சனாதிபதி தேர்தலிலும் இவர் தோல்வி அடைந்தார். தற்போது கட்சியினுள் நிலவும் உட்பூசலைத்தீர்க்க கடும் முயற்சி எடுத்து வருகின்றார். இவரே எதிர் கட்சி தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிமீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்து உணர்வு ஒப்பந்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் முக்கிய பங்காற்றியவர்.