யாகூ! மெசன்ஜர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாகூ! மெசன்ஜர் 8.1 வின்டோஸ் இயங்குதளத்தில் தொடர்புகள் |
|
பராமரிப்பாளர்: | யாகூ! |
பிந்திய பதிப்பு: | 8.1.0.209 (Windows)/3.0b1 (Mac) / டிசெம்பர் 4, 2006 |
இயங்கு தளம்: | வின்டோஸ் 98/Me, 2000, XP, விஸ்டா, Mac OS X, Mac OS 9, Mac OS 8, யுனிக்ஸ் |
வகை: | VoIP/Instant messaging client |
உரிமை: | Proprietary freeware |
messenger.yahoo.com |
யாகூ! மெசன்ஜர் என்பது யாகூவினால் உருவாக்கப்பட்ட இலவசமான இணைய உரையாடல் சேவை மென்பொருளாகும். யாகூ! மெசன்ஜரைப் பதிவிறக்கியோ வெப்மெசன்ஜர் என்ற இணையத்தள சேவை வழியாகவோ பயன்படுத்தலாம். பதிவிறக்கப்பட்ட பதிப்பில் இணையத்தளப் பதிப்பை காட்டிலும் வசதிகள் அதிகமாக இருக்கும். யாகூ! மெசன்ஜர் கணக்கை கெயிம் போன்ற சேவைகள் கொண்டும் அணுக முடியும்.
யாகூ! மெசன்ஜர் சேவையை யாகூ! பயனர் கணக்கை கொண்டே பயன்படுத்தலாம். இதனால், யாகூ! மெசன்ஜரைப் பயன்படுத்தும்போது, யாகூ! மின்னஞ்சலில் வரும் மடல்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கணினியிடை குரல்வழி அழைப்புகள், கணினி - தொலைபேசி அழைப்புகள், கோப்புப் பரிமாற்றங்கள், இணையப் படக்கருவி அணுக்கம், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை ஆகிய வசதிகளையும் தருகிறது. யாகூ! மெசன்ஜர் பட்டியலில் உள்ள நண்பர்கள் அறியாமல் அதை பயன்படுத்தும் வசதி இருந்தாலும், படி ஸ்பை (Buddy Spy) என்னும் இலவச மென்பொருள் மூலம் நண்பர்கள் உரையாடலில் ஈடுபடுவதை அறிய முடியும்.
இம்மென்பொருளில் ஏனைய உரையாடல் மென்பொருட்களிற்கு மேலதிகமாக IMVironments (உரையாடல் window வின் தோற்றத்தை மாற்றல்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவதாரங்கள் என்னும் வசதிகள் உள்ளன. எனினும் இவ்வசதிகளானது விண்டோஸ் தவிர்ந்த ஏனை இயங்குதளங்களில் கிடையாது. யாகூவின் ஆப்பிள் கணினியிற்கான மெசன்ஜர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.
ஜூலை 13 2006 இல் இருந்து, யாகூ!, மைக்ரோசாப்ட் உடன் தனது மெசன்ஜர் வலையமைப்பை சேர்த்துக் கொண்டது. இதன் மூலம், மைக்ரோசாப்டின் .நெட் மெசன்ஜர் சேவையுடன் ஒத்தியங்கும் திறனை யாகூ! மெசன்ஜர் பெற்றது. இத்துடன், விண்டோஸ் லைவ் மெசன்ஜரிலிருந்து யாகூ மெசன்ஜருக்கும் யாகூ மெசன்ஜரிலிருந்து விண்டோஸ் லைவ் மெசன்ஜருக்கும் உரையாடல்கள் நிகழ்த்த முடியும். யாகூ! மெசன்ஜர், யாகூ! அரட்டை அறைக்குள் நுழைந்து கொள்ள அனுமதிக்கும் என்றாலும் இலவசமான ஜாவாவிலான மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் இயங்க மாட்டாது.
பொருளடக்கம் |
[தொகு] வசதிகள்
[தொகு] யாகூ! மெசன்ஜர் பொருத்துக்கள்
யாகூ! மெசன்ஜர் பொருத்துக்களை விருத்தி செய்யும் மென்பொருட்களூடாக விருத்தி செய்யலாம். இம்மென்பொருட்கள் யாகூ! மெசன்ஜர் பொருத்து SDK ஊடாகக் கிடைக்கின்றது.
[தொகு] யாகூ! மெயிலுடன் கூட்டிணைவு
நவம்பர் 9 , 2006 முதல் யாகூ! மெசன்ஜர் யாகூ! மெயிலுடன் கூட்டிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. உரையாடல் மின்னஞ்சல்கள் போன்றே சேமிக்கமுடியும். பின்னர் இதை தேடவும் முடியும் எனவே எந்தக் கணினியில் இருந்து உரையாடலில் ஈடுபட்டனர் என்ற பிரச்சினை இல்லாது ஒழிக்கப்படுகின்றது.
[தொகு] தமிழ் ஆதரவு
தமிழ் ஆதரவும் யாகூ! மெசன்ஜன்ரின் 7 ஆவது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட இந்திய மொழிகளை ஆதரிக்கத் தொடங்கியது. லினக்ஸில் இயங்கும் கெயிம் தமிழில் நேரடியாக உரையாடல்களில் ஈடுபடலாமெனினும் வின்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகின்ற கெயிம் மென்பொருளில் நேரடியாக தமிழை உள்ளீடு செய்வது சிரமான காரியம். இதற்குத் தீர்வாக யாகூ! மெசன்ஜரில் IndiChat என்கிற பொருத்தை (plugin) பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் தமிழ், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் யாகூ! மெசன்ஜர் பயனருடனோ அல்லது விண்டோஸ் லைவ் மெசன்ஜருடனும் பயனருடனோ ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து உரையாட முடியும்.
[தொகு] பதிவிறக்கம்
- அதிகாரப்பூர்வ பதிவிறக்கத் தளம்
- யாகூ மெசன்ஜர் முழுப்பதிவிற்க்கம் அதிகாரப்பூர்வத்தளத்தில் இருந்து கோப்பிற்கான நேரடி இணைப்பு
- யாகூ தூதுவன் விண்டோஸ் பதிவிறக்கம் பீட்டாநியூஸ் விவாதங்களுடன்
- யாகூ தூதுவன் முழு Offline விண்டோஸ் பதிவிறக்கம்
- IndiChat பொருத்துப் பதிவிறக்கம் - யாகூ! மெசன்ஜரில் தமிழில் தட்டச்சு செய்ய.