Privacy Policy Cookie Policy Terms and Conditions மாட்டு வண்டி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மாட்டு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மாட்டு வண்டிப் பயனம்
மாட்டு வண்டிப் பயனம்

மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்தியப் பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.


கயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார். பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயனிகளும் பின் பகுதியில் அமரலாம். ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்கள் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு. பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மாட்டுவண்டிப் பொம்மை.
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மாட்டுவண்டிப் பொம்மை.

வண்டிமாடுகள், ஓட்டுனரின் எடையைத் தாண்டி பொருட்களை வண்டியின் பிற்பகுதியில் ஏற்ற மாட்டனர். மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் சாட்டையும் பொருத்தப்பட்ட பிரம்புக் குச்சியாகும். மாடுகள் வேகம் குறையும்போது, சாட்டையால் அடித்தோ ஊசி கொண்டு குத்தியோ மாடுகளை வேகம் கொள்ளச் செய்வர். மாட்டின் வாலை திருகி வேகமூட்டுவதும் உண்டு. ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனர் இன்றி கூட குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு வண்டியிழுக்கப் பயன்படும் மாடுகள் அவற்றின் சிறு வயது முதலே இணையாக வளர்க்கப்படும். இவ்வாறு இணை சேர்க்கப்படும் மாடுகள் ஒரே உயரம், வளர்ச்சி உடையனவாக பார்த்துக் கொள்ளப்படும். பொலி காளைகளை போன்றன்றி, இம்மாடுகளின் இனப்பெருக்க விதைப் பைகள் சிதைக்கப்பட்டே வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இல்லையெனில், இவற்றை கட்டுப்படுத்தி வண்டி இழுக்கப் பயன்படுத்துவது சிரமமாகும். நன்கு வளர்ந்த ஒன்றுக்கொன்று பழக்கப்படாத புதிய மாடுகளை வண்டி இழுக்கச் செய்வது கடினமாகும். வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், இணை மாடு மற்றும் வண்டியின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மாடுகளுக்கு போதுமான பயிற்சி தேவை. பயிற்சியற்ற மாடுகளை வண்டியில் பூட்டி இழுக்க இயலாது.

மாட்டு வண்டி மறியல்
மாட்டு வண்டி மறியல்

இவ்வண்டிகளின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். பெரும் பகுதி மரத்தையும், சிறிதளவு இரும்பையும் கொண்டு இவ்வண்டிகள் செய்யப்படுகின்றன. சிற்றூர்களை ஒட்டிய பகுதிகளில் இவ்வண்டிகளை செய்வதற்கென்றே பெயர் பெற்ற ஆசாரிகள் இருப்பர். தோற்றத்தில் விலை குறைவானவை போன்று இருந்தாலும், ஒரு வண்டி செய்வதற்கு குறைந்தது இந்திய ரூபாய் 15,000 செலவு பிடிக்கும். மரச்சக்கரங்களாலான பழங்கால வகை மாட்டுவண்டிகளின் இழுவைத் திறன் குறைவே. மணல், சேறு நிறைந்த பகுதிகளில் இவற்றை இழுத்துச் செல்வது கடினம். நவீன கால மாட்டுவண்டிகளின் கூடு முழுக்க இரும்பாலும், சக்கரங்கள் tyreகளாலும் ஆனவை. இவ்வகை வண்டிகளை வாங்க அரசும் கூட்டுறவுச் சங்கங்களும் கடன் மற்றும் மானியம் தந்து உதவுகின்றன. நன்கு வளர்ந்த ஓரிணை வண்டிமாடுகளின் விலை, குறைந்தது இந்திய ரூபாய் 10,000 இருக்கும். எனவே, வண்டிமாடுகளை சிறு வயதிலேயே குறைந்த விலையில் வாங்கி வளர்க்க முற்படுவர். அல்லது, தத்தம் பண்ணைகளில் பிறக்கும் காளைகளை இணையாக வளர்க்க முற்படுவர். இது தவிர மாடுகளை பராமரிக்க, அவற்றுக்கு தீவனம், வைக்கோல் அளிக்க தனிச் செலவுகள் ஏற்படும். எனவே, ஓர் உழவர் மாட்டு வண்டி வைத்திருந்தால் அவர் ஓரளவு வசதி உடையவர் என்று அறியலாம்.

மாட்டு வண்டிகளை தடை செய்யும் சந்திகர் மாநிலப் போக்குவரத்துச் சின்னம்.
மாட்டு வண்டிகளை தடை செய்யும் சந்திகர் மாநிலப் போக்குவரத்துச் சின்னம்.

மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். வண்டிகளை இழுத்துச் செல்ல, வண்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகரங்களில் ஓடும், தொழிற்சாலைப் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படும் வண்டிகள் ஒற்றை மாட்டைக் கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். சிற்றூர்களில் ஓடும் வண்டிகள் இரண்டு மாடுகளை கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.


உழவர் வீடுகளில் உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளே வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. எக்காரணம் கொண்டும், பசு மாடுகளை இவற்றில் பூட்டி ஓட்டுவதில்லை. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலின் காரணமாகவும் உயர்ந்து வரும் கூலித் தொகைகளின் காரணமாகவும், தற்பொழுது உழவுக்கு மாடுகள் வளர்ப்பதும், உழவு வாடகைக்கு என மாடுகளை விடுவதும் குறைந்து வருகிறது. இதனால், வண்டி மாடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேம்பட்டு வரும் சாலை வசதிகள், சுமையுந்துகளின் பெருக்கம் காரணமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளின் தேவை குறைந்து வருகிறது.


பயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணி வைப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். மாட்டுப் பொங்கல் நாளை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கும் வண்ணமடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்டப் போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. திருவிழாக்காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழுக்குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர். இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்குப் பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.

ஏனைய மொழிகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu