பெயர்ச்சொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
என்று ஆறு வகைப்படும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
எ.கா:
பொருட்பெயர் | : மனிதன், பசு, புத்தகம் |
இடப்பெயர் | : சென்னை, தமிழகம் |
காலப்பெயர் | : மணி, நாள், மாதம், ஆண்டு |
சினைப்பெயர் | : கண், கை, தலை |
பண்புப்பெயர் | : இனிமை, நீலம், நீளம், சதுரம் |
தொழிற்பெயர் | : படித்தல், உண்ணல், உறங்குதல் |