நிலத்தோற்ற வாழ்சூழலியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology) என்பது வாழ்சூழலியல் (ecology) மற்றும் புவியியல் என்பவற்றின் துணைத் துறையாகும். இது இடஞ்சார்ந்த வேறுபாடுகளை ஆராய்வதோடு, வயல்கள், ஆறுகள், நகரங்கள் போன்ற நிலத்தோற்றக் கூறுகள் (landscape elements) தொடர்பாகவும், அவற்றின் பரவல் எப்படி சூழலில், சக்தி மற்றும் தனிப்பட்டவர்களின் பரம்பல் மீது தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பது பற்றியும் ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. நிலத்தோற்ற வாழ்சூழலியல், எடுத்துக்கொண்ட விடயத்தை, பயன்பாட்டு மற்றும் முழுதளாவிய சூழ்நிலைகளின் அடிப்படையில் கையாளுகிறது.