டி. எஸ். சேனநாயக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டி. எஸ். சேனநாயக்கா | |
---|---|
பிறப்பு | 1884,ஒக்டோபர் 20 |
இறப்பு | 1952,மார்ச் 22 |
பணி | இலங்கையின் முதலாவது பிரதமர். |
டி. எஸ். சேனநாயக்கா சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும்,இலங்கையின் தேசபிதாவும் ஆவார். இவர் 1884 அக்டோபர் 20 திகதி பிறந்தார். பௌத்தரான இவர் தனது கல்வியை கொழும்பு செண்ட். தோமஸ் கல்லூரியில் படித்தார்.பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில்Surveyor General's office) லிகிதராகCleark வேலைபார்த்தார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமானஇறப்பர் தோட்டத்தை கவனிக்க சென்றுவிட்டார். 1929 ல் இலங்கை சட்டவாக்க கழகத்தில்(Legislative council) ஒரு உறுப்பினரானார்.1931 ல் State Council க்கு தெரிவு செய்யப்பட்டதுடன் விவசாய, காணி அமைச்சரானார்.விவசாய மறுமலர்ச்சிக்கு பெரிதும் உழைத்தார்.1946 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட Knight பட்டத்தை மறுத்தார்,எனினும் பிரிட்டிஷ் காலனியாதிக்ககாரர்களுடன் நல்லுறவை விரும்பினார்.1947 இல் நடந்த பொது தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையின் முதலாவது பிரதமரானார் 1948 பெப்ரவரி 4 பிரிட்டிஷ்காலனியாதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையும் நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றார், கல்லோயா திட்டத்தினை ஆரம்பித்துவத்தார்.22 மார்ச் 1952 இல் குதிரை சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார்.இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனநாயக்க இலங்கையின் பிரதமரானார்.