சிங்கள மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்களம் සිංහල (சிங்ஹள) |
||||
---|---|---|---|---|
நாடுகள்: | இலங்கை | |||
பிராந்தியம்: | வட இலங்கை தவிர்ந்த | |||
பேசுபவர்கள்: | 16 மில்லியன் | |||
நிலை: | 70[1] | |||
மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்தோ-ஈரானிய இந்தோ-ஆரிய தென் வலயம் சிங்களம்-மாலைத்தீவு சிங்களம் |
|||
எழுத்து முறை: | சிங்கள எழுத்து முறை பிராமி மொழியை தழுவியதாகும். | |||
அதிகாரப்பூர்வ அங்கீகார நிலை | ||||
அரசு அலுவல் மொழி அங்கீகாரம்: | இலங்கை | |||
கட்டுப்படுத்தல் மற்றும் நிர்வாகம்: | இல்லை | |||
மொழிக் குறியீடுகள் | ||||
ISO 639-1: | si | |||
ISO 639-2: | sin | |||
ISO/FDIS 639-3: | sin | |||
|
சிங்களவர் பண்பாடு |
மொழி |
சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
சிங்கள எழுத்துக்கள், கி.மு 3 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டைய வட இந்தியப் பிராமி வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும். கி.மு.6 ஆம் நூற்றாண்டில், பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.
சிங்களம், ஏனைய இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், அவுஸ்திரோனீசியன் போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி எனப் பிழையாக விளங்கிக் கொண்டார்கள்.
சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான இலக்கிய ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு பௌத்த சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன.
சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,ரொடி குலத்தவராலும்,இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது.சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் (ஸ்ரீ லங்கா)யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
[தொகு] அகராதிகள்
- ஆங்கிலச் சிங்கள அகராதி அணுகப்பட்டது நவம்பர் 29, 2006