சமிந்த வாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமிந்த வாஸ் (பிறப்பு ஜனவரி 27, 1974) இலங்கை அணியின் வேகப் பந்தாளர். கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்விகற்ற வாஸ் 1994 இல் இலங்கை அணியில் இடம்பிடித்தார். இடதுகை மிதவேகப் பந்தாளரான இவர் அணியின் தொடக்கப் பந்தாளராக ஆடுபவர். இடதுகைத் துடுப்பாளராகவும் ஓரளவு திறமையை வெளிக்காட்டும் சகலதுறை ஆட்டக்காரர். சிம்பாவேக்கு எதிராக இவர் 19 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளை வீழ்த்தியமையே ஒருநாட் போட்டிகளில் சாதனையாகும். ஒருநாள் போட்டிகளில் 300 க்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.