சனத் ஜெயசூரிய
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சனத் ஜயசூரிய (ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.