கொசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொசு (இலங்கைத் தமிழ்: நுளம்பு), குலிசிடை (culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொன்டவையாகும். இவ்வகை பூச்சிகளில் பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உரிஞ்சும். ஆண் கொசுக்கள் பழச்சாற்றை பருகும்.