கே. எஸ். ரவிகுமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
[தொகு] இயக்கிய திரைப்படங்கள்
- புரியாத புதிர் (அறிமுகம்)
- சேரன் பாண்டியன்
- நாட்டாமை
- நட்புக்காக
- அவ்வை சண்முகி
- தெனாலி
- படையப்பா
- முத்து
- வில்லன்
- மின்சார கண்ணா
- எதிரி