கி. ராஜநாராயணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (K.Rajanarayanan), கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும், ருசிமிக்கதும் இவரது எழுத்து. 1958\ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக வேலை செய்த பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, எண்பது வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] படைப்புகள்
[தொகு] எழுத்துக்கள்
- கோபல்ல கிராமம்
- கிடை
- வேஷ்டி
- கதவு
- கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
- கரிசல் காட்டுக் கடுதாசி
- பிஞ்சுகள்
- அந்தமான் நாயக்கர்
[தொகு] திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
- ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன் குமார் இயக்கிய திரைப்படம்)