இலங்கையில் தகவல் தொடர்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] தொலைபேசி
ஆரம்பத்தில் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இணைப்புக்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து சண்ரெல் மற்றும் லங்காபெல் ஆகிய்வை இணைந்து கொண்டன. சண்ரெல் கட்டணம் கட்டியவுடன் இணைப்பை வழங்கியதால் பலர் சண்ரெல் இணைப்புக்களைப் பெற்றனர். இலங்கையில் நகர்பேசிகள் டயலொக், மோபிற்றல், ஹச், செல்ரெல் போன்றவை வழங்கினாலும் அதிகரித்த கட்டணங்கள் நெரிசல்கள் போன்ற பல்வேறு வசதியீனங்களைக் கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து அறிமுகப் படுத்தப் பட்ட CDMA இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
[தொகு] இணையம்
ஆரம்பகாலத்தில் டயல் அப் இணைப்புக்கள் மாத்திரமே இருந்தன. இவ்வகை இணைப்புக்கள் அதிகூடியதாக 56kbps வேகத்தில் இணையக்கூடியதாக இருந்தது. இவ்வகை இணைப்புக்களை இலங்கைத் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் சண்ரெல் ஆகியவை வழங்கிவந்தன. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இது தவிர குத்தகைகு விடப்படும் இணைப்புக்களை (leased line) வழங்கியது இது அதிகமான மாதாந்த வாடகையால் பிரபலமடையவில்லை. 2004 ஆம் ஆண்டு SLT அகன்ற அலைவரிசை இணைப்பில் (broad band) adsl இணைப்பை கொழும்பு பெரும்பாகத்தில் வழங்கியது 2005 ஆம் ஆண்டில் இவ்விணைப்பை நீர்கொழும்பு கண்டி ஆகிய பகுதிகளிற்கு விரிவு படுத்தியது. அநேகமாக leased line இணைப்பு வைத்திருந்தவர்கள் adsl இற்கு மாறிக் கொண்டார்கள். இதற்குப் போட்டியாக Suntel xdsl இணைப்பை இலங்கையின் அநேகமான பகுதிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. எனினும் xdsl அதிகமான மாதாந்தக் கட்டணம் காரணமாக அதிக பிரபலம் அடையவில்லை. இதைத் தொடர்ந்து 2005 ஆம் மே மாதமளவில் Suntel 115.2kbps இணைப்பையும் lankabell 153kbps வேகத்தில் CDMA தொலைபேசியூடாக வழங்க ஆரம்பித்து. இதன் வெற்றியை அவதானித்த SLTயும் நவம்பர் 2005 ஆம் ஆண்டில் CDMA ஐ அறிமுகம் செய்தது.
[தொகு] தொழில்நுட்பத் தகவல்கள்
[தொகு] டயல் அப் இணைப்புக்களின் அதிகூடிய வேகம்
- இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் கம்பி இணைப்புக்களுக்கு 56 கிலோபிட்ஸ்/செக்கண்
- இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA தொலைபேசிகளுக்கு 115.2 கிலோபிட்ஸ்/செக்கண்
- சண்ரெல் CDMA தொலைபேசிகள் 115.2 கிலோபிட்ஸ்/செக்கண் மடிக்கணினிகளின் CDMA தொலைபேசி 230.4 கிலோபிட்ஸ்/செக்கண்
- லங்காபெல் CDMA தொலைபேசி 153 கிலோபிட்ஸ்/செக்கண்
[தொகு] அகன்ற அலைஇணைப்புக்கள்
- இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
- ஆபிஸ் எக்ஸ்பிரஸ் பதிவிறக்கம் 2 மெகாபிட்ஸ்/செக்கண் மேலேற்றம் 512 கிலோபிட்ஸ்/செக்கண்
- ஹோம் எக்ஸ்பிரஸ் பதிவிறக்கம் 512 கிலோபிட்ஸ்/செக்கM மேலேற்றம் 128 கிலோபிட்ஸ்/செக்கண்
- சண்ரெல்
- xdsl பதிவிறக்கம்/மேலேற்றம் இரண்டும் 128 கிலோபிட்ஸ்/செக்கண்