Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆப்கானிஸ்தான் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆப்கானிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

د افغانستان اسلامي جمهوریت
த அப்ஃகானிசுடான் இசுலாமி ஜொமோரியாட்
جمهوری اسلامی افغانستان
ஜொமோரியே-எ எஸ்லாமி-யே அஃப்கானிஸ்டான்

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு
ஆப்கானிஸ்தானின் கொடி  ஆப்கானிஸ்தானின்  சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டு வணக்கம்: Soroud-e-Melli
ஆப்கானிஸ்தானின் அமைவிடம்
தலைநகரம் காபூல்
34°31′N 69°08′E
பெரிய நகரம் காபூல்
ஆட்சி மொழி(கள்) பசுடோ,பாரசீகா
அரசு இஸ்லாமிய குடியரசு
 - அதிபர் அமிட் கர்சாய்
 - உப-அதிபர் அகமது சியா மாசூட்
 - பதில் அதிபர் கரிம் கலீலி
விடுதலை ஐ.இ.யிடமிருன்ந்து 
 - பிரகடனம் ஆகஸ்டு 8, 1919 
 - அங்கீகரம் ஆகஸ்டு 19, 1919 
பரப்பளவு  
 - மொத்தம் 652,090 கி.மீ.² (41வது)
  251,772 சதுர மைல் 
 - நீர் (%) தகவல் இல்லை
மக்கள்தொகை  
 - 2005 மதிப்பீடு 29,863,000 (38வது)
 - 1979 கணிப்பீடு 13,051,358
 - அடர்த்தி 46/கிமி² (150வது)
119/சதுர மைல் 
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 மதிப்பீடு
 - மொத்தம் $31.9 பில்லியன் (91வது)
 - ஆள்வீதம் $1,310 (162வது)
ம.வ.சு (2003) தகவல் இல்லை (நிலையில்லை) – இல்லை
நாணயம் அப்கானி (Af) (AFN)
நேர வலயம் (ஒ.ச.நே.+4:30)
 - கோடை  (ப.சே.நே.) (ஒ.ச.நே.+4:30)
இணைய குறி .af
தொலைபேசி +93

அப்கானிஸ்தான் உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட மத்திய ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கினதும் தெற்காசியாவினதும் பகுதியாகவும் நோக்கப்பட்டுவதுண்டு. மேற்கே ஈரானை எல்லையாகவும் தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானையும் வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்வற்றையும் கிழக்கில் சீனாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான் இதன் எல்லையில் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாக செல்கிறது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவிவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைத்த பாதைகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1747 முதல் 1973 வரை ஆப்கானிஸ்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது ஆயினும் சில இராணுவ அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றி குடியரசாக அறிவித்தனர்.

1979 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இந்நிகழ்ச்சி ஆப்கான் – சோவியத் யுத்ததிற்கு வழி சமைத்தது. 1989 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய போதிலும் நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கரில்லாக் குழுக்கள் தொடர்ந்தும் சோவியத் அரசால் அமைக்கப்பட்ட மத்திய அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. 1992 ல் இந்த அரசு செயல் இழந்ததுடன் தலீபான் ஆட்சியைக் கைப்பற்றும் வரை இங்கு ஸ்திரமான ஒரு ஆட்சியும் இருக்கவில்லை. தலீபானால் 1996 ல் தலைநகரம் காபூல் கைப்பற்றப்பட்டது. 1990 களில் தலீபான் நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இவர்கள் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது மற்றும் ஆண்கள் தாடியை அழகு படுத்தாமல் அதன் பாட்டுக்கு வளர விட வேண்டும் என்பவற்றைக் குறிப்பிடலாம். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின்னர் தலீபான் சர்வதேச தீவிரவாதத்திற்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா தலைமையில் தலீபான் ஆட்சி 2001 கடைசியில் ஆப்கானிஸ்தானில் இருந்து நீக்கப்பட்டது.

[தொகு] பெயரின் பிண்னனி

ஆப்கானிஸ்தான் என்பதன் நேரடி மொழிபொயர்ப்பு ஆப்கானியரின் பூமி என்பதாகும். ஆஃப்கான் என்ற சொல்லில் இருந்து தற்கால வழக்கு மருவி வந்துள்ளது. பஸ்டுன்ஸ்கள் இதை இஸ்லாமிய காலத்தில் இருந்து இந்த ஆப்கான் என்ற பதத்தை தமக்குப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு.கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி ஜில்லட் மற்றும் சில துறை சார் அறிஞர்களின் கருத்துப்படி, "ஆப்கான் என்ற சொல் முதன் முதலாக வரலாற்றில் கி.மு 982 ல் அதூத்-அல்-அலாம் என்ற கிபி 10வது நூற்றாண்டு வரலாற்று நூலில் காணப்படுகின்றது. ” இறுதிச் சொல்லான ஸ்டான் (நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல் 1781 தொடக்கம் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட குவாஜார் அரவம்சத்திற்க்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.

ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ம் நூற்றாண்டில் அஹமட் ஷா அப்டாலி புதிய அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் அப்டுர் ரகுமான் கான் என்பவரால் இது உத்தியோக பூர்வ பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கொராசன் என்றே அறியப்பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பகுதி கொராசனினையே மையமாகக் கொண்டுள்ளது.

[தொகு] வரலாறு

ஆப்கானிஸ்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான பிரதேசமாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரீகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்பு புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்.), கிரேக்கர், Mauryans, Kushans, Hepthalites, அரேபியர், மொங்கோலியர், துருக்கி, பிருத்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

கிமு 2000 ம் ஆண்டளவில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானினுள் குடிபெயர்ந்துள்ளனர். இவ்வாறு வந்து குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரியர்களாவர். இவர்கள் இந்து – ஐரோப்பிய மொழியைப் பேசியமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் ஆரியர்கள் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள்ளும் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பிரதேசங்கள் ஆரியானா அல்லது ஆரியர்களின் பூமி என அழைக்கப்பட்டது.

கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசிகப் பேரரசான Achaemenid சாம்ராஜம் எனும் சாம்ராஜம் பலமாக இருந்தது. கிமு 300 ம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 ல் இவரின் மரணத்திற்குப் பின்னர் Seleucids, Bactria, அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இப்பிராந்தியத்தினுள் பொளத்த மதம் பரப்பப்பட்டது.

கிபி முதலாம் நூற்றாண்டில Tocharian Kushans போன்றோர் இப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை Parthians, Scythians, மற்றும் Huns போன்ற Eurasian tribes உம் Sassanian போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான Hindu Shahis போன்றோர் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்பிராஜங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில்ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இப்பிரதேசத்தில் பல சாமபிராஜ்ஜியங்கள் உருப்பெற்றன. எ-கா Ghaznavid Empire (962-1151) என்ற பேரரசு துருக்கியைச் சேர்ந்த Yamin ul-Dawlah Mahmud என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேற்கூறிய பேரரசு Ghorid Empire (1151-1219), என்ற அரசினால் வெற்றி கொள்ளப்பட்டது.

1299 ல் இப்பிராந்தியம் செங்கிஸ் கான் என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குட்பட்டது. இவன் மொங்கோலிய இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். 1504 ல் பார்பர் என்ற ஆட்சியாளனினால் காபூலை மையமாகக் கொண்டு முகலாயப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. 17 ம் நூற்றாண்டு அளவில் பாரசீகத்தின் Safavids ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

18 ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் Ghaznavid Khan Nasher என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி ஆப்கானிஸ்தானில் வெடித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப்பட்டதுடன், கிழக்கு ஈரான் பிரதேசத்தையும் 1719-1729 வரையான காலம் ஆப்கானியர்கள் ஆண்டனர். 1729 ல் பாரசீகத்தின் நதீர் ஷா என்பவன் ஆப்கானியரை தோற்கடித்தான். 1738 ல் நதீர் ஷா கந்தகாரை வெற்றி கொள்வதுடன் அதே வருடத்தில் காபூல், லாகூர், Ghazni போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்கின்றான். 1747 ல் நதீர் ஷாவின் மரணம் அடைகின்றான். 1747 ல் ஆப்கான்/Pashtuns ஆகியோர் கந்தகாரில் கூடி அஹமது ஷா என்பவனை மன்னனாக முடி சூட்டிவிக்கின்றனர். இவர் தனது கடைசிப் பெயரை டுரியோ (என்கது முத்துக்களின் முத்து என்று பொருள்படும்) என மாற்றிக்கொண்டான். டுரானி பேரரசு காலத்துடனே இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் பிரதேசம் உருவாகின்றது. 19 ம் நூற்றாண்டு அளவில் இந்தப்பிரதேசம் பல்வேறு உட்குளப்பங்களுக்கு உள்ளானது. பாரசீகர் மற்றும் சீக்கியருடனான பிரைச்சனைகள் காரணமாக சுமார் ஒரு நூற்றாண்டு மட்டுமே இந்த பேரரசு நிலைத்து இருந்தது. ஆயினும் பிருத்தானியரின் காலப்பகுதிவரை ஆப்கானின் எல்லைகள் இன்று போன்று வரையறுக்கப்பட முடியாமல் இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர்
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர்
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com