அல்லாஹ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள்.
கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று.
இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.