அனலைதீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனலைதீவு (Analaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும்.
[தொகு] அனலைதீவுக் கோயில்கள்
இத்தீவிலே பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
- ஸ்ரீ கௌரியம்மாள் கோயில், போர்த்துக்கேயர் சிதைத்த கோயில்களில் ஒன்று.
- புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டது.
- அரசன்புலம் சங்கநாதர் கணபதிப்பிள்ளையார் கோயில்
- ஆறாம் வட்டாரம் சங்கநாதர் முருகமூர்த்தி கோயில்
- ஆறாம் வட்டாரம் எழுமங்கை நாச்சிமார் அம்பாள் கோயில்
- நான்காம் வட்டாரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில்
- இரண்டாம் வட்டாரம் பத்திரகாளியம்மன் கோயில்
- ஐந்தாம் வட்டாரம் ஐயனார் கோயில்
[தொகு] துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.