விருதுநகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விருதுநகர் (Viruthunagar), தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டமும் அம்மாவட்டத்தின் தலைநகரமமும் ஆகும்.இம்மாவட்டம் முதலில் சிலகாலம் காமராஜர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், தலைவர்களின் பெயரை மாவட்டங்களுக்கு வைக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு பெயரிடல் மரபில் மாற்றம் கொண்டு வந்ததன் விளைவாக இப்பெயர் பெற்றது. சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருவில்லிப்புத்தூர் ஆகிய ஊர்கள் இம்மாவட்டத்தின் கீழ் வருகின்றன.