விதைப்பவனும் விதையும் உவமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விதைப்பவனும் விதையும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமையாகும். இவ்வுவமைக்கு பொருளும் இயேசுவே கூறினார். இயேசு தனது உவமையொன்றுக்கு பொருள் கூறிய வேறு ஒரு சம்பவம் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வுவமையை இயேசு, பல பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் அவரிடத்தில் வந்து கூடியபோது, அவர் மக்களுக்கு உவமையாகச் சொன்னார். இது விவிலியத்தில் மூன்று நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுள்ளது. மத்தேயு 13:3-8;மாற்கு 4:3-8; லூக்கா 8:5-8
பொருளடக்கம் |
[தொகு] உவமை
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
[தொகு] கருத்து
விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்பவர்களாயிருக்கிறார்கள் அவர்கள் விசுவாசித்து(நம்பி உட்கொண்டு) காக்கப்படாதபடிக்குப் அலகையானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இதயத்திலிருந்து அகற்றிவிடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது மகிழ்ச்சியுடனே வசனத்தை ஏற்கிறார்கள், ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாத படியினாலே, சிறி்து காலம் மட்டும் விசுவாசித்து (நம்பி உட்கொண்டு), சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேடபவர்களாயிருக்கிறார்கள் கேட்டு வெளியே போன வுடனே, உலகத்துக்குரிய கவலைகளினாலும் உலகப்பொருட்களினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதனுடைய உண்மையும் நன்மையுமான இதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுப்பவர்களாயிருக்கிறார்கள்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] உசாத்துணை
- தமிழ் விவிலியம் லூக்கா 8
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழ் கிறிஸ்தவ சபைவிதைக்கிறவனும் விதையும் உவமை
- உவமைகளின் விளக்கம்