வளிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வளிமம் (வாயு, gas) என்பது காற்று போன்ற வடிவம் கொண்ட பொருள்.
சூறாவளி என்னும் புயல் காற்றைக் குறிக்கும் சொல்லில் உள்ள வளி என்பது காற்று. வளிமம் என்பது காற்றுபோன்ற வடிவம் உள்ள பொருள்களைக் குறிக்கும் சொல். மாந்தர்களும் பிற பல விலங்குகளும் உயர்வாழ அடிப்படையாக தேவைப்படும் ஒரு வகை வளிமம் ஆக்ஸிஜன் (ஆக்~சி’சன் oxygen) எனப்படும். இதை உயிர்வளி என குறிக்கிறார்கள். ஃஐடிர’சன் (ஹைடிரஜன்) என்னும் வளிமத்தைத் தமிழில் நீரதை என்றும் வழங்குவதும் உண்டு. எனவே ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், நியான், ஹைட்ரஜன் போன்ற பல பொருள்கள் வளிம நின்லையில் உள்ளன,
வெப்ப நிலையை கூட்டிக் கொண்டே போனால், எல்லாப் பொருளும் வளிம நிலையை அடையும். தங்கம் வெள்ளி போன்ற திட (திண்ம) நிலையில் உள்ள ஒரு பொருளும், அதன் வெப்ப நிலை உயர உயர, அது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகிப், பின்னர் இன்னும் வெப்ப நிலையைக் கூட்டிக்கொண்டே போனால், உருகிய பொருள் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதி நிலையை அடைந்து பின்னர் வெப்பம் கூடக் கூட அப்பொருள் வளிம வடிவம் கொண்டுவிடும். எனவே எல்லாப் பொருளும் ஒரு வெப்பநிலையில் வளிமமாக மாறிவிடும்.
நாம் வாழும் நில உலகில் உள்ள காற்று மண்டலத்தில் சற்றேறக் குறைய 78% நைட்டிர'சன் என்னும் வளிமமும், 21% உயிர்வளியும் (ஆக்~சி'சன், oxygen) எஞ்சியுள்ள 1% மட்டும் தான் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பிற வளிமங்கள்.
பொருள்கள் நான்கு நிலைகள் இருக்க வல்லன. அவையாவன,
- திட அல்லது திண்ம நிலை
- நீர்ம நிலைஅல்லது திரவ நிலை
- வளிம நிலை அல்லது வாயு நிலை
- ஈடான மின்மக் கலவை நிலை அல்லது பிளாசுமா நிலை
வெப்பநிலை, சுற்றுபுற அழுத்த நிலை இவைகளைப் பொறுத்து ஒரு பொருள் இந்த நான்கு நிலைகளில் ஏதாவதொரு நிலையில் இருக்கும்.
[தொகு] வளிமம் பற்றிய விதிகள்
- 'பாயில் விதி (1662) (Boyle's law)
- சார்லசு விதி (1787-1802) (Charles's law)
- 'கே லூசாக் விதி (1809) (Gay-Lussac's law)
- P என்பது அழுத்தம் (அலகு பாசுக்கல் Pascal)
- V என்பது கொள்ளளவு அலகு கன மீட்டர்)
- n என்பது வளிமத்தின் மூலக்கூறு அளவு எண் (the number of moles of gas)
- R என்பது கருத்தியல் வளிம சிறப்பெண். (8.31 J/mol K)
- T என்பது வெப்ப நிலை (அலகு கெல்வின் Kelvins.)