வலைத்தளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வலைத்தளம் அல்லது இணையத்தளம் (குறுக்கவடிவமாக தளம் என்றும் பயன்படுத்துவர்) என்பது பெரும்பாலும், இணையத்தில் குறித்த ஒரு ஆள்களப்பெயருக்கு அல்லது துணை ஆள்களப்பெயருக்கு பொதுவான வலைப்பக்கங்களை கூட்டாக குறிக்கும்.
வலைப்பக்கமானது பொதுவாக மீயுரை பரிமாற்ற வரைமுறையினூடாக (HTTP) பெற்று பார்வையிடக்கூடிய ஒரு HTML/XHTML ஆவணமாக இருக்கும்.
வலைத்தளத்திலுள்ள வலைப்பக்கங்கள் யாவும், பொதுவாக ஒரே [[வழங்கி|வழங்கியில்] வைக்கப்பட்டிருக்கும். சிலவேளைகளில் வெவ்வேறு வழங்கிகளிலும் வைக்கப்பட்டிருக்கலாம்.
ஆள்களப்பெயரை உலாவியில் இட்டு வலைத்தளத்தை அணுகும்போது, அவ்வலைத்தளத்திலுள்ள அத்தனை பக்கங்களையும் சென்றடைந்துவிட முடியாது. முதலில் முகப்பு பக்கமே காண்பிக்கப்படும். முகப்புப்பக்கத்தில் மற்றைய பக்கங்களுக்கான தொடுப்புக்கள் இருக்கலாம்.
முகப்புபக்கத்தை முதன்மையாகக்கொண்டு மற்றைய பக்கங்கள் படிமுறை ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும்.
வலைத்தளங்களை பொதுவாக இலவசமாகவே பார்வையிடலாம் என்ற போதிலும், சில வலைத்தளங்கள் கட்டணம் செலுத்தியே பார்வையிடப்படவேடியனவாயுள்ளன.
வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு இணைய உலாவி எனப்படும் சிறப்பான மென்பொருள் தேவைப்படும்.
[தொகு] வலைத்தோடு தொடர்புடைய துணைக்கூறுகள்
- வழங்கி -இதுவே வலைத்தளத்தை சேமித்து வைத்திருந்து இணையத்திற்கு பரிமாறுகிறது.
- தரவுத்தளம் - இது வலைத்தளத்தோடு தொடர்புடைய தரவுகளையும் தகவல்களையும் முறைப்படி சேமித்து ஒழுங்கமைக்கிறது.
[தொகு] வலைத்தளத்தோடு தொடர்புடைய சொற்கள்
- தொடுப்பு - தன்மேல் சொடுக்கும்போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.
- தேடுபொறி - வலைத்தளத்திலிருக்கும் ஏதவதொரு சொல்லை அல்லது விடயத்தை தேடுவதற்கு உபயோகிக்கப்படும் நிரல்.
- சாளரம் - வலைப்பக்கத்தை காட்டிக்கொண்டிருக்கும் உலாவியின் நடப்பு முகப்பு.
- துள்ளிவரும் சாளரம் - popup - தொடுப்பொன்றினை சொடுக்கும்போது துள்ளிவந்து முன்னிற்கும் சளரம். சிலவேளை விளம்பர நோக்கங்களுக்காக பயனர் எதுவும் செய்யாமலேயே துள்ளிவரும் சாளரங்கள் தானாக தோன்றும்படி நிரல் எழுதப்பட்டிருக்கும்.
- விளம்பரம் - வலைத்தளத்தில் ஆங்காங்கு காணப்படும் விளம்பரங்கள்.
- விசை - தம்மீது சொடுகும்போது பல்வேறு பணிகளை செய்யும் பகுதிகள்.
- தரவிறக்கம் - வலைத்தளத்திலிருந்து கோப்புக்களை கணினிக்கு இறக்கி சேமித்தல்.
- தரவேற்றம் - கணினியிலிருந்து கோப்பினை வலைத்தளத்தின் வழங்கிக்கு ஏற்றிக்கொள்ளுதல்.