ராபர்ட் ஹூக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.
அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.
1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.