யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 197- ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாற்றுப் பின்னணி
இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.
அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகினர் எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக் கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.
1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972 ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகமொன்றை நிறுவி 1974 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.
அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக் கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக் கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக் கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இவ் வளாகங்கள் அனைத்தும் தனித்தனியான பல்கலைக் கழகங்களானபோது, யாழ்ப்பாண வளாகமும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆனது.
[தொகு] வவுனியா வளாகம்
இதன் ஓர் வளாகம் வவுனியாவில் நகரப்பகுதியில் உள்ளது. குருமண்காட்டில் விஞ்ஞானபீடமும், ஆங்கில கறகைநெறிகளுக்கான பீடம் மின்சாரநிலையத்திற்கு அருகிலும் வணிகக் கல்விப் பீடமானது வவுனியா உள்வட்ட வீதியிலும் அமைந்துள்ளது. வவுனியாப் பீடத்திற்கான ஒருதொகை நிலப்பரப்பானது வவுனியா மன்னார் வீதியில் A30 (தேசப்படத்தில் வவுனியா பறையனாலங்குளம் வீதி என்றே காணப்படுகின்றபோதும் இப்பெயரானது பாவனையில் இல்லை) பம்பைமடுப் பகுதியில் சுமார் வவுனியா நகரத்தில் இருந்து 8km தொலைவில் ஒதுக்கப்பட்டு விடுதியொன்றை நிர்மாணிக்கும் வேலைகள் தொடங்கியிள்ளபோதும் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக இங்கே வளாகத்தை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே காணப் படுகின்றது.
[தொகு] பிரிவுகளும் கற்கைத் துறைகளும்
- விவசாயப் பிரிவு
- கலைப் பிரிவு
- பொறியியற் பிரிவு
- முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவு
- மருத்துவப் பிரிவு
- விஞ்ஞானப் பிரிவு