யாகூ! தேடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாகூ! தேடலானது யாகூ!விற்குச் சொந்தமான ஓர் தேடுபொறியாகும். யாகூ! தேடல்கள் உண்மையில் ஓர் பயனர் இடைமுகத்தையே வழங்கி வருகின்றது. தேடலைத் திரைக்குப் பின்னால் வேறுதேடுபொறியூடகாத் (மிக அண்மையில் கூகிள்) தேடலை மேற்கொண்டு தேடல்முடிவுகளைப் பயனருக்கு யாகூ! வர்த்தகச் சின்னத்தில் வெளிப்படுத்தும். ஆரம்பத்தில் இருந்தே வெப்கிறாவ்லிங் (Webcrawling) சேமிப்புக்கள்/சேமிப்பில் இருந்து மீள்வித்தல் ஆகியன யாகூ!வினாற் செய்யப்படவில்லை.
2002 ஆம் ஆண்டில் திரைக்குப் பின்னால் தேடல்களை மேற்கொள்ள உதவிய இன்ங்ரோமி (Inktomi) தேடுபொறியை விலைக்கு வாங்கிக் கொண்டனர். இன்ங்ரோமி யாகூ!விற்கு மாத்திரம் அன்றி வேறுபல இணையத்தளங்களிற்கும் தேடலை மேற்கொள்ளவுதவின. 2003 ஆம் ஆண்டில் அல்டாவிஸ்டா(AltaVista) ஆல்தவெவ்(AlltheWeb) தேடுபொறிகளை இயக்கிய ஓவர்ரியூவர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினர். எனினும் பல்வேறு தேடுபொறிகளைச் சொந்தமாகக் கொண்டபோதிலும் இதன் பிரதான பக்கத்தில் கூகிள் தேடுபொறியையே உபயோகித்தனர்.
2004ஆம் ஆண்டில் இருந்து சொந்தமாக யாகூ! சிலர்ப் (Yahoo! Slurp) என்கின்ற வெப்கிறாவ்லரைப் பாவிக்கத் தொடங்கினர். யாகூ! தேடல்கள் சொந்த ஆய்வுகளுக்கு மேலதிகமாக விலைக்கு வாங்கிய தேடுபொறியுடன் திறமைகளையும் சேர்த்துக்கொண்டது. வேறு நிறுவங்களிற்கும் தேடல்முடிவுகளை அவர்களின் இணையத் தளத்தில் காட்டுவதற்காக விற்கத் தொடங்கினர். யாகூவின் கூகிளின் சேர்த்தியங்குதலானது போட்டியினூடாக அச்சமயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.