யாகூ! அவதாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாகூ அவதாரம் எனபது யாகூ பயனரின் நடத்தைகளுக்கிசைவான பிரத்தியேகப்படுத்தப்பட்ட படமாகும்.இது HTML ஊடாக யாகூ! 360 மற்றும் யாகூ! மெசன்சன்ஜரின் உரையாடலிற் பயன்படுத்தக் கூடியது.
[தொகு] வசதிகள்
யாகூ அவதாரம் எல்லாப் பயனர் கணக்கிலுமுள்ள ஓர் வசதியாகும்.இவ்வசதியானது தானகவே யாகூ! மெசன்ஜர் மற்றும் 360 பயனர் பக்கத்திற் சேர்க்கப்படக்கூடியது. யாகூ! அவதாரம் ஆரம்பத்தில் நிகழ்நிலை உரையாடலில் (Chat) பயன்படுத்தப்பட்டது.
[தொகு] அவதாரத்தை உருவாக்கல்
அவதாரத்தை உருவாக்க அடோப் (அல்லது அடோபி முன்னைய மக்ரோமீடியா) பிளாஷ் பிளேயர் தேவைப்படும். இது தோலின் வடிவம் மற்றும் நிறம் ஆகியவற்றை மாற்றவுதவும். அத்துடன் சட்டையைத் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனங்களான அடிடாஸ் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். 2006ஆம் ஆண்டில் யாகூ! பெருமளவில் பின்னணிகளையும் பொருட்களையும் அதிகரித்துக் கொண்டது.