முட்டம் கடற்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. அழகிய நில அமைப்பைக்கொண்டது முட்டம். பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை.
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது.
முட்டம் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவதில் ஐயமே இல்லை.
முட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய திரைப்படங்கள்.
- . அலைகள் ஓய்வதில்லை
- . கடலோரக் கவிதைகள்
- . கடல் பூக்கள்
- . பகல் நிலவு
- . தாய்மேல் ஆணை
- . அம்மன்கோயில் கிழக்காலே
- . உயிரே உனக்காக
- . நிலாவே வா
- . பாடு நிலாவே
- . நான் பாடும் பாடல்
- . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
- . மஞ்சள் நிலா
- . சின்ன மேடம்