மார்டினா நவரதிலோவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்டினா நவரதிலோவா (பிறப்பு ஒக்ரோபர் 18, 1956) குறிப்பிடத்தகா ஒரு டென்னிஸ் வீராங்கனை. செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் 1981 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மொத்தம் 18 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 40 இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர். விம்பிள்டன் பட்டங்களை ஒன்பது தடவை வென்ற சாதனைக்குரியவர். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர்.