மகேஷ் பாபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகேஷ் பாபு (தெலுங்கு: మహేష్ బాబు), (பிறப்பு - ஆகஸ்டு 9, 1974, சென்னை), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். அவரது ரசிகர்களால் ப்ரின்ஸ் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி திரைப்படம் அதே பெயரில் தமிழாக்கப்பட்டு வருகிறது.
இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார்.
[தொகு] திரைப்பட விவரம்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | பிற குறிப்புகள் |
2006 | சைனிக்குடு | சித்தார்த்தா | நவம்பர் 22, 2006 வெளியீடு |
2006 | போக்கிரி | பண்டு / கிருஷ்ண மனோகர் | தென்னிந்தியாவின் மிகப்பெரிய வணிகவெற்றி. |
2005 | அத்தடு | நந்த கோபால் / பார்து | |
2004 | அர்ஜூன் | அர்ஜூன் | சிறப்பு நந்தி நடுவர் குழு விருது. |
2004 | நானி | நானி | |
2003 | நிஜம் | சீதாராம் | சிறந்த நடிகருக்கான நந்தி விருது. |
2003 | ஒக்கடு | அஜய் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது. |
2002 | பாபி | பாபி | |
2002 | தக்கரி தொங்கா | ராஜா | சிறப்பு நந்தி நடுவர் குழு விருது. |
2001 | முராரி | முராரி | சிறப்பு நந்தி நடுவர் குழு விருது. |
2000 | வம்சி | வம்சி | |
2000 | யுவராஜூ | ஸ்ரீநிவாஸ் | |
1999 | ராஜ குமாருடு | ராஜா | அறிமுக நடிகருக்கான நந்தி விருது. |
[தொகு] துணுக்குகள்
- 6 அடி 2 அங்குல உயரமுள்ள மகேஷ் பாபு, தெலுங்குத் திரையுலகின் உயரமான நடிகர்களில் ஒருவர்.
[தொகு] வெளியிணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Mahesh Babu