பிளேபோய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிளேபோய் வயது வந்தோருக்கான ஒரு அமெரிக்க இதழாகும். 1953 இல் Hugh Hefner என்பவரால் தோற்றுவிக்கபட்ட இது Playboy Enterprises, Inc. என்னும் நிறுவனமாக தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல நடுகளிலும் பதிப்புக்கள் வெளிவருகின்றன. பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன.