பாலுமகேந்திரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலு மகேந்திரா ( Balu mahendra ), திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர்,இலங்கையில் பிறந்தவர்; இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவினைப் பயின்றார். அங்கு தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டவர், பாலு. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
பல் வேறு கருப்பொருள் கொண்ட கதைகளை யதார்த்தமாக உலகத் தரத்திற்கு இணையாக இயக்கியுள்ளார். "மூன்றாம் பிறை", "அழியாத கோலங்கள்", "வீடு", "சந்தியா ராகம்", "மறுபடியும்", "மூடு பனி" முதலியன இவருடைய புகழ் பெற்ற படங்களில் சில.
பாலுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்கின்றனர். "சேது","நந்தா","பிதாமகன்" போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
[தொகு] இயக்கிய திரைப்படங்கள்
- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- கோகிலா
- அழியாத கோலங்கள்
- மூடுபனி
- மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
- ஓலங்கள் (மலையாளம்)
- நீரக்ஷ்னா (தெலுங்கு)
- சத்மா (ஹிந்தி)
- ஊமை குயில்
- மூன்றாம் பிறை
- நீங்கள் கேட்டவை
- உன் கண்ணில் நீர் வழிந்தால்
- யாத்ரா
- ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
- இரட்டை வால் குருவி
- வீடு
- சந்தியாராகம்
- வண்ண வண்ண பூக்கள்
- பூந்தேன் அருவி சுவன்னு
- சக்ர வியூகம்
- மறுபடியும்
- சதி லீலாவதி
- அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
- ராமன் அப்துல்லா
- ஜூலி கணபதி
- அது ஒரு கனாக்காலம்