பகுப்பு பேச்சு:பாடல் பெற்ற தலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோபி, இப்பகுப்பில் உள்ள பல ஊர்கள் அவற்றில் உள்ள கோயில்களைத் தாண்டியும் குறிப்பிடத்தக்க சிறப்பு பெற்றன (எடுத்துக்காட்டு-திருமயிலாப்பூர், திருவான்மியூர்). ganeshbotம் பல தகவல்களை சேர்க்கக்கூடும். எனவே, பாடல் பெற்ற தலங்களான கோயில்களின் பெயர்களிலேயே கட்டுரைகளைத் தொடங்குவது ஊர்ப்பெயர்களின் கீழ் கட்டுரைகளைத் தொடங்குவதை விட பொருத்தமாகவும் துல்லியமாகவும் இருக்கும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை கோயில்களின் பெயருக்கு நகர்த்திவிட்டு தற்போது உள்ள கட்டுரைகளை அழிப்பதை குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்--ரவி 08:20, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- ரவி. பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நான் ஏற்கனவே கட்டுரைகளின் பெயர்களை மாற்றலாம் எனக் குறிப்பிடுள்ளேன். எனக்கு தமிழகக் கோயில்களின் பெயர்கள் தொடர்பில் போதிய விளக்கமில்லை. ஊர்ப் பெயர்கள், கோயில்களின் பெயர்கள் என்பவற்றில் எது ஊர்ப்பெயர் எது கோவிலின் பெயர் என்பதிலும் எவை தற்போதைய பெயர்கள், எவை பண்டைய பெயர்கள் என்பதிலும் எனக்கு குழப்பங்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 275 பாடல் பெற்ற தலங்கள் தொடர்பாகவும் குறுங்கட்டுரைகள் உருவாக்கவுள்ளேன். ஆதலால் சரியான பெயர் மாற்றங்களைச் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 10:34, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, எனக்கு இந்தத் துறையில் பரிச்சயம் இல்லை. எனினும், வேறு எவரும் பின்னர் உதவுவர் என எதிர்பார்க்கலாம். பண்டைக் காலத்தில் இத்தலங்கள் கோயிலாலே அறியப்பெற்றன. இக்கோயில்களைச் சுற்றி நகரங்களும் எழுந்தன. எனவே தலப் பெயரும் கோயில் பெயரும் ஒன்றாய் விளங்கின. நவீன காலத்துக்கு தலப் பெயரையும் கோயில் பெயரையும் ஒன்றாக்குவது பொருந்தாது. மயூரநாதன், kanags உதவக்கூடும்--ரவி 11:26, 13 ஆகஸ்ட் 2006 (UTC)