பரராசசேகரன் உலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரராசசேகரன் உலா என்னும் நூல் பழைய பத்திய ரூபமான (செய்யுள் வடிவில் அமைந்த) யாழ்ப்பாணச் சரித்திர நூலாகும். செய்தார் பெயர் நிச்சயமாகத் தெரியவில்லை. மனப்புலி முதலியார் செய்ததென்பர். இது அகப்படவில்லை. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதிய மயில்வாகனப் புலவர், தனது நூலுக்கான முதல் நூல்களிலொன்றாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.