Privacy Policy Cookie Policy Terms and Conditions பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தொகுப்பு

தொகுப்புகள்


1 2

பொருளடக்கம்

[தொகு] பாராட்டுக்கள்

நிரோ, லக்ஸ்மி மிட்டால் கட்டுரை நன்று. பாராட்டுக்கள். --Sivakumar \பேச்சு 11:56, 14 அக்டோபர் 2006 (UTC)

நன்றி--சக்திவேல் நிரோஜன் 14:40, 14 அக்டோபர் 2006 (UTC)


[தொகு] நிர்வாகிகளுக்கான ஒரு வேண்டுகோள்

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியே பக்கங்கள் அமைப்பது நன்று என்று எனத் தோன்றுகின்றது.அவ்வாறு ஆங்கிலப் பாடல்களிற்காக ஆங்கில விக்கியில் பார்க்கின்றேன்.அவ்வாறு உருவாக்கினால் பயனர்களும் அதிகரிப்பர் என்று நினைக்கின்றேன்.இது எனது விருப்பம்.ஆனால் அதனைப் பற்றி நிர்வாகிகள் கலந்துரையாடி ஆட்சேபனையேதும் இருந்தால் தெரிவிக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 04:08, 23 அக்டோபர் 2006 (UTC)

ஆங்கில விக்கியில் இவ்வாறு உள்ள சில பக்கங்களுக்கான இணைப்புகளைத் தர முடியுமா? அங்கு எல்லா பாடல்களுக்கும் கட்டுரை தொடங்க அனுமதி உண்டா? இல்லா, குறிப்பிடத்தக்க பாடல்களை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் என் கருத்துக்களை தெரிவிக்க இயலும்--ரவி 07:59, 23 அக்டோபர் 2006 (UTC)

http://en.wikipedia.org/wiki/Category:Songs_by_artist ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றிய மேலோட்டம் தான் உள்ளது ஆனாலும் தமிழ்த் திரையிசைப் பாடல்களோ மற்றும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வெளிநாடு வாழ் இளம் சமூகத்தினருக்கு அவசியமாக நான் கருதுகின்றேன் இது என்னுடைய அவா.ஆனாலும் அப்படி திரையிசைப் பாடல்களை த.வி போடலாமா இல்லை அவற்றினை வேறு பகுதிகளில் போடுவதா என்பது எனக்கு சந்தேகம்தான்.அவ்வாறு உருவாக்குவதனால் தவறுகளேதும் இருந்தால் அவ்வாறு உருவாக்க வேண்டாம்.--சக்திவேல் நிரோஜன் 15:23, 23 அக்டோபர் 2006 (UTC)

நிரோ, தமிழிசைப் பாடல்களை விக்கிபீடியாவில் இணைப்பது தவறானது. ஏனெனில் பாடல்கள் பதிப்புரிமையுடையுடையவை. பதிப்புரிமை அனுமதி கிடைத்தாலும் விக்கிமூலத்தில்தான் இணைக்கலாம். கலைக்களஞ்சியத்துக்குப் பொருந்தாது. ஆனால் பாடல்களைப் பற்றிய பக்கங்கள் உருவாக்குவது பிழையில்லை. நாம் உருவாக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் பல உள்ளன. மில்லியன் கணக்கில் பக்கங்கள் உள்ள ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் தமிழில் செய்ய வேண்டியவை எராளம் உள்ளன. நன்றி. --கோபி 15:39, 23 அக்டோபர் 2006 (UTC)

உங்களால் திரைத்துறைக்கு அப்பாலும் நிறையப் பங்களிக்க முடிவதையிட்டு மகிழ்ச்சி. மேலும் பல நடிக நடிகைகளைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்குமளவு கூட தமிழில் இல்லை என்பதை உங்களது கவனத்துக் கொண்டு வர விரும்புகிறேன். பார்க்க http://en.wikipedia.org/wiki/Category:Tamil_actors கோபி 15:42, 23 அக்டோபர் 2006 (UTC)

நிரோ, நீங்கள் தந்த ஆங்கில விக்கி இணைப்பை பார்த்தேன். புகழ்பெற்ற உலகப் பாடகர்கள், அவர்களின் பாடல் தொகுப்புகள், புகழ்பெற்ற பாடல்கள் குறித்த கட்டுரைகளை தாராளமாக எழுதலாம் (எடுத்துக்காட்டு, celine dion, அவரின் my heart will go on பாடல் பற்றி எழுதலாம்). பதிப்புரிமை காரணங்களுக்காகவும், கலைக்களஞ்சிய நோக்கத்துக்காகவும் முழுப் பாடல் வரிகளை எழுதக் கூடாது என்பது நீங்கள் அறிந்தது தான். இளையராஜாவின் how to name it, nothing but wind போன்ற இசைத்தொகுப்புகள் குறித்து எழுதலாம். எனினும், குறிப்பிட்டுக் கட்டுரை அளவில் எழுதக்கூடிய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எத்தனை உள்ளன என்று சொல்ல இயலவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் எழுதலாம். ஆனால், வெறும் பாடல் துவக்க வரி, பாடியவர்,இசையமைப்பாளர், கவிஞர் விவரம் தரும் கட்டுரைகளை நீங்கள் தவிர்க்கலாம். அது போன்ற பங்களிப்புகளை தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் செய்து, தேவைப்படும்போது தமிழ் விக்கிபீடியாவில் இருந்து வெளி இணைப்பாகத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, http://tamilcinema.wikia.com தளத்தில் பங்களிக்கலாம். அவையும் கூகுள் தேடல் முடிவுகளில் அடையப்பெறும் வாய்ப்பு உண்டு. எனவே, உங்கள் நோக்கமான தமிழில் திரையிசைத் தகவல் தரும் நோக்கமும் வெற்றி பெறும்.

நாளுக்கு நாள், உங்கள் பங்களிப்புகளின் தரம் மேம்பட்டு வருகிறது. மகிழ்ச்சி. பிறகு, நிர்வாகிகளுக்கு எனத் தனி அழைப்பிட்டு கருத்துக்களை எழுத வேண்டும். விக்கிபீடியாவில் அனைவரும் சேர்ந்து தான் முடிவெடுக்கிறோம். அனைவரும் ஒரு காலத்தில் பயனராக இருந்து நிர்வாகி ஆனவர்களே..உங்கள் தொடர்ந்த தரமான பங்களிப்புகளின் மூலம் நீங்களும் நிர்வாகிப் பொறுப்பு ஏற்கத் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். நன்றி--ரவி 17:58, 23 அக்டோபர் 2006 (UTC)


[தொகு] பயனர்களின் உதவி நாடப்படுகின்றது

இவ்வாருப்புருவை தமிழில் மொழி பெயர்க்க என்ன செய்வது.--சக்திவேல் நிரோஜன் 13:39, 2 நவம்பர் 2006 (UTC)

நிரோ, வார்ப்புருவைத் தமிழாக்க உதவமுடியும். இந்த வார்ப்புரு ஏற்கனவே தமிழில் உள்ளதா? இல்லாவிட்டால் புதிய வார்ப்புருவைத் தமிழில் (ஆங்கிலத்தில் இருந்து அப்படியே பிரதி பண்ணி) சேமித்துவிட்டுப் பின்னர் படிப்படியாக பிற பயனர்களின் உதவியுடன் மொழிபெயர்க்கலாம். CVG என்றால் என்ன:))--Kanags 21:07, 2 நவம்பர் 2006 (UTC)

அதாவது இந்த வார்ப்புரு நிகழ்பட ஆட்டங்களினைப் பற்றிய வார்ப்புரு--சக்திவேல் நிரோஜன் 21:15, 2 நவம்பர் 2006 (UTC)

நிரோ,

உங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள வார்பருவுக்கான சிவப்பு இணைப்பை சொடுக்குங்கள்.

பிறகு, ஆங்கில விக்கியில் இதே பெயரில் உள்ள வார்ப்புரு பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கு சென்று தேடல் பெட்டியில் template:infobox CVG என்று இட்டு go பொத்தான் அழுத்துங்கள். அந்த வார்ப்புரு பக்கம் வரும். பிறகு அதன் தொகு இணைப்பை அழுத்தி அங்கு உள்ள முழு பக்கத்தையும் வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டியதைக் கொண்டு வந்து மேலே தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் திறந்து வைத்திருக்கும் வெற்றுப் பக்கத்தில் ஒட்டவும். அந்த ஆங்கில விக்கிப் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே மூடி விடுங்கள்.

தமிழ் விக்கி வார்ப்பு பக்கத்தில் ஒட்டியவுடன், அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவற்றை தமிழாக்கி பக்கத்தை சேமித்து விடுங்கள். பிற பயனர்கள் மேம்படுத்தி உதவுவர்..

இப்படி உங்களுக்கு விருப்பமான வார்ப்புருக்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

இது தான் நான் உங்களுக்கு அனுப்பிய மடல் விவரம் நிரோ--Ravidreams 20:13, 9 நவம்பர் 2006 (UTC)

நன்றி--சக்திவேல் நிரோஜன் 20:30, 9 நவம்பர் 2006 (UTC)

[தொகு] சில திரைப்படங்கள் ...:-)

[தொகு] நேரடியாக எழுதுதல்

உங்களுக்கு நல்ல ரசனை இருக்கின்றது. நல்ல திரைப்படங்களைத் தெரிந்து எழுதுகின்றீர்கள்.

ஆங்கிலத்தில் active voice என்று சொல்வார்கள். Ex: ("the car hit the tree") rather than the passive ("the tree was hit by the car"). அதாவது நேரடிய ஒரு விடயத்தை சொல்வது நன்று என்று நினைக்கின்றேன். இந்த குறையை நானும் பல இடங்களில் செய்கின்றேன். ஒரு பரிந்துரைதான். --Natkeeran 00:52, 3 நவம்பர் 2006 (UTC)

நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பதற்கு பதிலாக நடித்துள்ளார்கள் என்று எழுதானல் நன்றாக இருக்குமா? --Natkeeran 23:15, 3 நவம்பர் 2006 (UTC)

ஆம் உங்கள் விருப்பம்படியே இனிமேல் எழுதுகின்றேன் ஏன் நான் அவ்வாறு எழுதுகின்றேன் என்றால் நடிகர்கள் நடிப்பதற்கே ஆனாலும் பல விடயங்களில் இந்த இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் நடிகர்கள் நடித்துள்ளனர் என்று குறிப்பிடுவது சரியாக நான் நினைக்கவில்லை அதனலேயே அவ்வாறு உருவாக்கினேன் மேலும் இனிமேல் தாங்கள் விரும்பியது போன்று மாற்றி எழுதுகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 23:18, 3 நவம்பர் 2006 (UTC)

பழைவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நீங்கள் எழுதும் முறை சிறப்பாக தெரிந்தால், உங்கள் முறையை மாற்றாதீர்கள். --Natkeeran 23:46, 3 நவம்பர் 2006 (UTC)

[தொகு] கனடாவில் விபச்சாரம்

மீண்டும் தொந்தரவுக்கும் மன்னிக்கவும்.

கனடாவில் விபச்சாரம் என்றால் என்ன என்று சற்று விபரித்து விட்டு பின்னர் அந்த விடயத்தை சார்ந்த பிற அம்சங்களை ஆய்தால் நன்று. --Natkeeran 01:29, 4 நவம்பர் 2006 (UTC)

[தொகு] Hindi -> இந்தி

Hindi என்றால் தமிழில் இந்தி என்று எழுதுவது வழக்கம். இதை ரவி உறிதிப்படுத்தியிருந்தார். பார்க்க: பகுப்பு பேச்சு:ஹிந்தித் திரைப்படங்கள். எனினும் உங்களுக்கு ஆட்சோபனை என்றால், பழையபடியே மாற்றி விடுகின்றேன். இவற்றை நீங்களே முனைப்பு எடுத்து செய்கின்றீர்கள், எனவே உங்கள் கருத்து முக்கியம். --Natkeeran 15:11, 11 நவம்பர் 2006 (UTC)

எதுவேண்டுமென்றாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் மாற்ற விரும்பினால் கட்டுரைகள் உள்ளே நிறைய மாற்றங்களும் செய்ய வேண்டும்.என்னைப்பொறுத்தவரை ஹிந்தியே சரியாகப்படுகின்றது ஏனெனின் indi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்க இயலாது காரணம் அதன் உச்சரிப்பு.hindi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்கலாம் அதனால் என்னைப்பொருத்தவரையில் ஹிந்தி சரியாகப்படுகின்றது.--சக்திவேல் நிரோஜன் 15:18, 11 நவம்பர் 2006 (UTC)

indi popஐ இந்திப் பாப் என்று எழுதினால் hindi pop என்று குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது உண்மை தான். ஆனால், தமிழ்நாட்டில் hindi என்பதை இந்தி என்று பரவலாக எழுதும் வழக்கம் உள்ளது. indi pop என்பது indian pop வேறு வேறா? ஒன்று தானென்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். இல்லை என்றால் குழப்பம் தவிர்க்க யோசிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்--Ravidreams 16:06, 11 நவம்பர் 2006 (UTC)

hindi pop ஹிந்தி பாப் வேறு indi pop இந்தி பாப் வேறு அதனாலேயே அவ்வாறு நான் தெரிவித்தேன்.--சக்திவேல் நிரோஜன் 23:44, 11 நவம்பர் 2006 (UTC)

//Indian pop music, often known as Indi-pop or Hindi pop, is a term that refers to pop music of India. It is based on various Indian folk or classical music, influenced by modern beats from different parts of the world. Indian pop was relatively non-existent until the late 1970s to early 1980s.//
மேற்கண்ட வரிகள் ஆங்கில விக்கி கட்டுரை en:Indian pop -இல் இடம்பெற்றுள்ளது. இதன்படி indian pop = indi pop = hindi pop. ஆனால், indi pop வேறு hindi pop வேறு என்று உங்களுக்குத் தோன்றினால், indi popஐ இண்டி பாப் என்று எழுதுங்களேன்..அல்லது தமிழொலிப்புக்கு ஏற்ப எழுதுவது என்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். --Ravidreams 09
08, 12 நவம்பர் 2006 (UTC)

[தொகு] இப்பக்கத்தினை என்னால் அவதானிக்க முடியவில்லை

  • அனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (அட்டவணை) இப்பகுதியினுள் என்னால் செல்ல இயலவில்லை.--சக்திவேல் நிரோஜன் 15:21, 11 நவம்பர் 2006 (UTC)


[தொகு] சந்தேகம்

புதிதாக யாரும் என் பேச்சுப்பக்கத்தில் இடும் பொழுது விக்கியில் தானாகவே வரும் you got message வருவதில்லை என்ன காரணம்.--சக்திவேல் நிரோஜன் 23:42, 11 நவம்பர் 2006 (UTC)

சில சமயம் மீடியாவிக்கி மென்பொருளுக்கு காய்ச்சல் வந்தால் கூட இது மாதிரி ஆகலாம் :) வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என பார்த்து சரிசெய்ய முயல்கிறேன். பெரும்பாலும், அதுவே சரியாகி விடுவதுண்டு.--Ravidreams 09:10, 12 நவம்பர் 2006 (UTC)
நிரோஜன் சக்திவேல் என நீங்கள் ஆரம்பித்த பயனர் பக்கத்தையும் பேச்சுப் பக்கத்தையும் சக்திவேல் நிரோஜன் என்பதற்கு நீங்கள் அதிகாரியின் உதவியின்றி நகர்த்தியமை காரணமாக இருக்கலாம். பக்கங்களின் பெயர் மாற்றப்பட்டாலும் உங்களது பயனர் பெயர் இன்னமும் நிரோஜன் சக்திவேல் ஆகவே உள்ளது. கோபி 15:43, 12 நவம்பர் 2006 (UTC)


[தொகு] முதற்பக்கக் கட்டுரைகள்

முதற்பக்கக்கட்டுரைகள் திடீர் திடீரென மாற்றம் அடைகின்றனவே ஏன் இந்த அவசரம்.--சக்திவேல் நிரோஜன் 00:24, 14 நவம்பர் 2006 (UTC)

பார்க்க - Wikipedia:ஆலமரத்தடி#முதற்பக்க இற்றைப்படுத்தல்கள். இவை சரியாக ஒரு நாளைக்கு ஒரு முறை தானியக்கமாக மாறும். தொடர்ந்து தமிழ் விக்கிபீடியா தளத்துக்கு தினமும் பயனர்களை வரச் செய்வதற்கான உத்தி இது. பல விக்கிபீடியாக்களிலும் இது போன்று செய்யப்படுவது வாடிக்கை தான்--Ravidreams 05:53, 14 நவம்பர் 2006 (UTC)

[தொகு] நிர்வாகிகள் கவனிக்க

விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விளக்கத்திற்கான இணைப்பு மிகவும் அவசியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.மேலும் எ கலப்பையினை எவ்வாறு உபயோகிப்பது என முதற்பக்கத் தலையங்கத்தில் தருவது மிகவும் அவசியம் என நான் கருகின்றேன்.மேலும் தமிழில் எழுத எனத் தலைப்புக்கொடுத்தால் புதுப்பயனர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.--நிரோஜன் சக்திவேல் 02:24, 3 டிசம்பர் 2006 (UTC)

ஏற்கனவே உள்ளதனையும் அறிவேன் ஆனாலும் அதனை முதற்பக்கத்தின் தலைப்பில் அமைய மேலும் தமிழில் எழுத இல்லாவிடில் புதிய பயனர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தலைப்புடன் இருந்தால் பயனர்களின் பங்களிப்புகள் தொடரும்.--நிரோஜன் சக்திவேல் 02:26, 3 டிசம்பர் 2006 (UTC)

நல்ல ஆலோசனை, செய்யலாம். --Natkeeran 02:30, 3 டிசம்பர் 2006 (UTC)

மேலும் எவ்வாறு எ கலப்பையினை பதிவிறக்கம் செய்வது என்ற வெளியிணைப்பினையும் அளிப்பதனால் புதிய பயனர்கள் தமிழில் எழுதத்தெரியாத எழுதமுயலும் நண்பர்கள் எளிதில் பயனடைவரல்லவா.--நிரோஜன் சக்திவேல் 02:32, 3 டிசம்பர் 2006 (UTC)


[தொகு] 2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை

நிரோஜன், உங்கள் கருத்துகள் இங்கு Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review வரவேற்கப்படுகின்றன. கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --Natkeeran 03:17, 7 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] மகிழ்ச்சி

நிரோ, விஜய்க்கு உதவியாக நீங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தகவல் இட்டதை கண்டு மகிழ்ந்தேன். கட்டுரைகள் எழுதுவதில் இருந்து அடுத்த கட்டப் பங்களிப்பான நிர்வாக உதவிக்கு நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் விக்கிபீடியா செயல்பாடுகளை இன்னும் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டு புதிதாக வரும் பயனர்களுக்கு உதவியாக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்--Ravidreams 22:01, 9 டிசம்பர் 2006 (UTC)

என்னால் முடிந்ததை செய்கின்றேன் மேலும் எனக்கு இப்பொழுது you got message வேலை செய்கின்றது மகிழ்ச்சி ஆனாலும் என் தொகுப்புகளை அவதானிக்கமுடியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 22:55, 9 டிசம்பர் 2006 (UTC)

மேலும் middle east இதன் தமிழாக்கம் ஜக்கிய அரபு நாடுகள் தானே--நிரோஜன் சக்திவேல் 22:57, 9 டிசம்பர் 2006 (UTC)

நிரோ ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தான் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் இருக்கிறதா தெரியவில்லை. middle east என்பது மத்திய கிழக்கு நாடுகள் . உங்கள் தொகுப்புகளை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் என்ன கோளாறு என்று பார்க்கலாம்--Ravidreams 23:03, 9 டிசம்பர் 2006 (UTC)

இல்லை கோளாறு இல்லை பொதுவாக ஆங்கிலத்தில் middle east என்று தெரிந்தவர்கள் எவ்வாறு தமிழ் விக்கிபீடியாவில் தேடித் தெரிவர்.இது என்க்கிருக்கும் சந்தேகமே --நிரோஜன் சக்திவேல் 23:08, 9 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] நிச்சயம் பொறுமை காப்பேன் :-)

நிரோ, கட்டுரை உருவாக்கும்போது பைட்ஸ் அளவை விடத் தகவல் அளவே முக்கியமானது. அடிப்படைச் சட்டகத்தை மட்டும் இடுவது கட்டுரை அல்ல என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. மேலும் காலப்போக்கில் இவற்றை நீங்கள் விரிவாக்குவீர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு தனிக் கட்டுரையாக அமையும் அளவு விரிவாக இருப்பது போதுமானது. தொடர்ந்து பங்களிக்கும் பயனர் ஒருவரது கட்டுரைகளுக்கு speed-delete இடப்பட்டாலும் குறித்த காலத்துள் நீக்கப்பட்டதில்லை. ஆனால் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இந்த வேகத்தில் குறுங்கட்டுரைகள் உருவாக்கிச் சென்றால் விரிவாக்கப்படாமற் தேங்கவே வாய்ப்புக்கள் அதிகம். கட்டுரை எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. உள்ளடக்கமற்ற 100 கட்டுரைகளை விட ஆழமான 10 கட்டுரைகளின் பயன் அதிகமானது.

உங்களது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை விட பிறமொழிப் படங்கள் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். மேலும் நற்கீரன் சின்ன வட்டங்களுக்குள் நிற்க வேண்டாம் என்று எனக்குக் கூறியதையே உங்களுக்குக் கூற விரும்புகிறேன். திரைப்படங்களுக்கு அப்பாலும் பங்களிக்க உங்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றனவே! --கோபி 19:10, 12 டிசம்பர் 2006 (UTC)

நீங்கள் கூறியபடியே இக்கட்டுரைகளை விரிவாக்க முயல்கின்றேன் மேலும் பிற கட்டுரைகளிலும் ஆர்வம் காட்டுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 19:14, 12 டிசம்பர் 2006 (UTC)

நிரோ, மேற்குறிப்பிட்ட மிகச்சிறு கட்டுரைகளை முடிந்தவரை விரைவில் விரிவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் அவற்றை நீக்குவதே பொருத்தமாயிருக்கும். நன்றி. --கோபி 16:10, 17 டிசம்பர் 2006 (UTC)

நன்றி நிரோஜன், அவ்வாறே செய்கிறேன். போதிய தகவல்கள் கிடைக்கும்போது அவற்றை மீள உருவாக்குங்கள். புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு என் நன்றிகள். --கோபி 16:35, 17 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] தமிழ்த் திரைப்படங்கள் வகைகள்

தமிழ் திரைப்படங்களை வகை ரீதியாகவும் பகுப்படுத்தினால் நன்றாக இருக்குமா? எ.கா. [[பகுப்பு:தமிழ் மசாலாப்படம்]] --Natkeeran 02:12, 13 டிசம்பர் 2006 (UTC)

ஆம் ஆம் இது நான் நினைத்ததொன்றோ பொதுவாகா மசாலாத் திரைப்படங்கள்,கலைத் திரைப்படங்கள் அப்படியென்றால் திரைப்பட கல்வி பயில்வர்கள் மேலும் திரைப்படத்தினைப்பற்றி தெரிந்துகொள்ள முயல்வர்கள் பயன்பெறுவர் அத்தகைய காரணம்கருதி சில திரைப்படங்களிற்கு இட்டுள்ளேன் மேலும் வெகுவிரைவில் அனைத்துப்படங்களிற்கும் இடுபதாகா உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 02:19, 13 டிசம்பர் 2006 (UTC)

மேலும் நான் வகைகள் இடும் திரைப்படங்களினை முழுமையாகப் பார்த்து ஆராய்ந்த பின்னரே வகைகள் இடுகின்றேன் வெறுமனே நானாகவே இடவில்லை என்பதனையும் கருத்தில்கொள்க அதே வேளை இனி உருவாக்கும் அனைத்துத் திரைப்படங்களிற்கும் நீங்கள் கூறியவாறு இடுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 02:21, 13 டிசம்பர் 2006 (UTC)


எனது அனுமானம் என்ன வென்றால் நீங்கள் தமிழ் திரைப்படங்களையே இப்படி பொரும்பாலும் குறிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அப்படி என்றால் தமிழ் மசாலாப்படம் என்ற மாதிரியாகப் பகுப்படுத்தினால் அதை தமிழ் திரைப்படங்கள் என்ற வகைக்குள் அடக்கலாம். மசாலாத் திரைப்படம் என்றால் பிற மொழித் திரைப்படங்களும் அதற்குள் வருமா? --Natkeeran 02:44, 13 டிசம்பர் 2006 (UTC)

தமிழ் மசாலாப்படங்கள் என்று தனியாக பிரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா ஏனெனில் தமிழ்த்திரைப்படங்களில் மட்டும் மசாலாவகையில்லையெபதே உணமை தெலுங்கு,ஹிந்தி ஏன் கலைத் திரைப்பட உலகமான மலையாளத் திரைப்படங்களிலும் இவ்வாறான வகைகள் வளர்ச்சிபெறுகின்றன.--நிரோஜன் சக்திவேல் 03:09, 13 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] படங்களை நீக்குதல்

நிரோஜன் படங்களை நீக்குமாறு கோருகின்றீர்கள் சில பட்ங்கள் குறிப்பாக இலமூரியா போன்றவை ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியவையே. தவிர படிமம்:Prince of Persia SOT Fighting.png போன்றவை இளைஞ்ர்களைக் கவரக்கூடிய கணினி விளையாட்டுக்களே. இதற்கான காரணங்களை அறியலாமா?--Umapathy 20:04, 13 டிசம்பர் 2006 (UTC)

இலமூரியா ம்மெலும் அழிக்கக்கோரும் படிமங்கள் எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை.அதனால் அழிக்கக்கோருகின்றேன்.மேலும் இனிமேல் முழு விபரத்தினையும் சேர்த்து படிமங்களினை பதிவேற்றுவதாக உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 20:06, 13 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] குறிப்பு

நிரோ, படிமங்களை நீக்கக் கோரும்போது ஏன் என்ற காரணம் சொலுங்கள் (எடுத்துக்காட்டுக்கு - நான் பதிவேற்றிய இப்படிமம் இனிமேலும் தேவையில்லை!). ஒரே காரணத்துக்கு பல படிமங்களை நீக்கக் கோருகிறீர்கள் என்றால் மொத்தமாக அவற்றை wikipedia:படிம நீக்கப் பரிந்துரை பக்கத்தில் தெரிவியுங்கள். பிறகு, எந்த ஒரு தொகுப்பை செய்யும்போதும் தொகுப்புச் சுருக்கத்தை இடுங்கள். இல்லாவிட்டால், அண்மைய மாற்றங்கள் பக்க தொகுப்புச் சுருக்கத்தில் தானியக்கமாக கொச கொசவென்று சுருக்கம் வந்து விடுகிறது.--Ravidreams 08:10, 14 டிசம்பர் 2006 (UTC)

தொகுப்புச் சுருக்கம் எவ்வாறு இடுவது சற்று விளக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 13:57, 14 டிசம்பர் 2006 (UTC)

தொகுப்பு பெட்டியில் கீழ் சென்று பார்த்தீகளானால் சுருக்கம்: என்று ஆரம்பிக்கும் ஒரு பெட்டியை காண்பீர்கள் அதில் சுருக்கமாக நீங்கள் செய்த்ததை எழுதினால் நீங்கள் பக்கத்தை சேமிக்கும் போது அது அண்மைய மாற்றங்களில் தொகுப்பு இணைப்புக்கு அருகே வந்துவிடும்--டெரன்ஸ் \பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)


மேலும் ஒரு குறிப்பு இப்போது தவியில் ஏரளமான திரைப்படங்கள், கலைஞ்சர்கள் பற்றிய கட்டுரைகள் இருப்பதால் திரைப்படங்களுக்கு ஒரு நுழைவாயில் அமைக்கலாமே.உதாரணத்துக்கு இதை பார்க்கவும். நுழைவாயில்:இலங்கை --டெரன்ஸ் \பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)

தகவல்களிற்கு நன்றி மேலும் நுழைவாயில் யோசனை நல்லது மேலும் திரைப்படப்பிரிவுகளில் மொழிவாரியான திரைப்படங்கள்,நாடுவாரியான திரைப்படங்கள் என பிரித்து வகைப்படுத்த வெண்டும் மேலும் பகுப்பு பகுதியில் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருப்பதனால் நன்றாகப்படவில்லை.--நிரோஜன் சக்திவேல் 13:38, 18 டிசம்பர் 2006 (UTC)

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu