நாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது பூமி தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகிறது.
- நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,
- நாளுக்குரிய கால அளவு,
- நாளின் தொடக்கமும் முடிவும்,
- நாளுக்கான துணை அலகுகள் (sub-units),
- நாட் பெயர்கள்
என்பன இவ்வாறு வேறுபடுகின்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை.
பொருளடக்கம் |
[தொகு] ஜார்ஜியன் முறையில் நாள்
சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணித்தியாலம், நிமிடம், செக்கன் எனத் துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம் முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
- 1 நாள் = 24 மணித்தியாலங்கள்
- 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்
- 1 நிமிடம் = 60 செக்கன்கள்
ஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவுவரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஒரு எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
[தொகு] இந்துக் காலக் கணிப்பு முறையில் நாள்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இந்துக் காலக் கணிப்பு முறை
- தமிழர் காலக் கணிப்பு முறை
- தமிழ் மாதங்கள்