நாயன்மார்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் நாயன்மார்களில் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றனைவரும் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பது இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. இவர்களின் வரலாறு சேக்கிழாரால் பெரிய புராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நஇன்ற சீர் னெடுமர நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார். திருனாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசை?ஜ்னானியார் (Isaijnaniyar) மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியும் நாயன்மார்களில் ஒருவர்.