பகுப்பு பேச்சு:த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இப்பகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் ஆங்கிலப் பன்மைப் பெயரைக் கொண்டுள்ளன. அதற்குப் பதிலாக தமிழ்ப் பன்மை விகுதியான கள் என்பதை பயன்படுத்தலாம். (எ. கா - ஒர்க்ஸ் என்பதற்கு பதிலாக, ஒர்க்கள் அல்லது ஒர்க் (ஒருமைப் பெயர்))--ரவி 12:01, 23 ஜூன் 2006 (UTC)
- ஆனால் ரவி இங்கு வருபவர்கள் ஓர்க்கள் என்றெல்லாம் உள்ளிட்டு தேடமாட்டார்களே! மக்களை சென்றடையாமல் கட்டுரை தேங்குமானானல் என்ன பயன். பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும் இன்றுதான் இதைப்பார்த்தேன். --ஜெ.மயூரேசன் 10:33, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
மயூரேசன், தேடு பொறியில் மாட்டுவது தான் பிரச்சினை என்றால், தாராளமாக எத்தனை வழிமாற்றுப் பக்கங்கள் வேண்டுமானால் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால், இப்படைப்புகளுக்கு அறிமுகம் இல்லாத உறுப்பினர்கள் (என்னையும் சேர்த்து) ஒர்க்ஸ் என்ற பன்மைப் பெயரை தனிப் பெயராக நினைத்துக் கொள்ளுவதை தவிர்ப்பது அவசியம். ஆங்கிலக் கட்டுரை படிக்க போய் தான் ஒர்க்ஸ் என்பது பன்மைப் பெயர் எனத் தெரியும். அது வரை ஒர்க்ஸ் என்பது ஜேம்ஸ் என்பது போல் ஒரு பெயர் என நினைத்துக்கொண்டிருந்தேன். இந்தக் குழப்பத்தை தவிர்ப்பது அவசியம்--ரவி 11:37, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
- ரவியின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். ஆங்கிலத்திலும் ஓர்க் என்று ஒருமையிலேயே கட்டுரைத்தலைப்பு உள்ளது. கட்டுரைத்தலைப்புகளுக்கு பன்மையில் பெயர் வைப்பது தவிர்க்கப்படவேண்டும்.--Kanags 13:06, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- அப்பிடியானால் கட்டுரைகளை ஒருமை பெயரிற்கு மாற்றிவிடலாம்!--ஜெ.மயூரேசன் 06:08, 13 ஆகஸ்ட் 2006 (UTC)