திருவாலங்காடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவாலங்காடு - வடாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முவரதும் பாடல் பெற்ற தலமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).