திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக பொற்கிளி பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).