திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ இறைவன் தனது திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றருளினார் என்பதுவும் பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அந்நிலைய மாற்றினார் என்பதுவும் தொன்நம்பிக்கை (ஐதிகம்).