சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர், அச் சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவரின் முழு முதற் கடவுள். சிவனை வழிபடுவதாலேயே சைவம் என்ற பெயர் ஏற்பட்டது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் சிவன் அழித்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். சிவன் பல்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். நடராஜர், தட்சிணாமூர்த்தி, உருத்திரன், அர்த்தநாரீஸ்வரர் என்னும் மூர்த்தங்கள் இவற்றுட் சில.
[தொகு] சிவனின் தோற்றம்
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள சிவனின் சின்னத்தின் மூலம் சிவனே உலகில் வழிபடப்பெற்ற முதற் கடவுளாவார் என்பது ஆராய்ச்சியாளர்களரின் கூற்றாகும். [ஆதாரம் தேவை]