சார்ஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.
[தொகு] சார்ஜா அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல் குவெய்ன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமீரகங்கள் | |
---|---|
அபுதாபி | அஜ்மான் | துபாய் | புஜெய்ரா | ராஸ் அல் கைமா | சார்ஜா | உம் அல் குவெய்ன் |