சத்துருக்கொண்டான் படுகொலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சத்துருக்கொண்டான் படுகொலை செப்டம்பர் 9, 1990 ஆம்[1] ஆண்டில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த அகதிகள் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்ட சம்பவம் ஆகும்.
இச்சம்பவத்தின்போது மட்டக்களப்பினை அண்டிய மூன்று கிராமங்களைச்சேர்ந்த குழந்தைகள் உட்பட 180[2] அல்லது 184[3] பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்[4]. அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர். [5]
[தொகு] நீதி விசாரணை
இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை.
[தொகு] காலக்கோடு
[தொகு] வெளி இணைப்புக்கள்
- http://www.sangam.org/VIOLENCE/sathurukondan9_10_01.htm (ஆங்கிலம்)
- http://www.disappearances.org/mainfile.php/frep_sl_ne/78/Cyberspace (ஆங்கிலம்)
- http://www.hrw.org/wr2k1/asia/srilanka.html (ஆங்கிலம்)
- http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9824 (ஆங்கிலம்)
- சிறீலங்கா இராணுவத்தின் அதியுச்ச மனித உரிமை மீறல்கள் மட்டக்களப்பு ஈழநாதம், அணுகப்படது நவம்பர் 26, 2006 (தமிழ்)