சதுரகராதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதுரகராதி என்பது வீரமாமுனிவரால் (காலம் 1680-1742) உருவாக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி. வீரமாமுனிவரின் காலத்திற்கு முன் நிகண்டுகள் என்னும் செய்யுள் வகை நூல்கள் தாம் சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். அகராதி போல் வேண்டும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக நிகண்டுகள் இருந்தன.