கும்பகோணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கும்பகோணம் தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். காவிரிக் கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 313 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் பல கோயில்கள் உள்ளன. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும் பாக்கும் விளைகிறது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜம் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
[தொகு] நகரின் ஆன்மீகப் பெருமை
கீழைத் தமிழத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே மூன்று பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்
- கும்பகோணம் சோமேசர் கோயில்
- குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில்
[தொகு] வெளி இணைப்புகள்
- கும்பகோணத்தைப் பற்றி
- 'தென்னிந்தியாவின் கேம்பிரிட்ச்' எனப்பெயர்பெற்ற அரசினர் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்