கிளைமோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க்ளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine) என்பது தனிமனித இலக்குகளை தாக்க பயன்படும் கண்ணி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதனை Norman A. MacLeod என்பவர் கண்டறிந்தார். பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 60 பாகை ஆரைச்சிறைக்குள் ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திற்கு சிறு உருக்கு உருளைகளை (போல்ஸ்) அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது மறைந்திருந்து படைவீரர்களை தாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] க்ளைமோர் ஆயுதங்களிற்கு வெவ்வேறு நாடுகளில் வழங்கிவரும் பெயர்கள்
[தொகு] அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- Mine
- AntiPersonnel
- M18A1
[தொகு] சோவியத் ஒன்றியம்
- MON-50
- MON-90
- MON-100
- MON-200
[தொகு] இஸ்ரேல்
- No. 6
[தொகு] பிரான்ஸ்
- MAPED F1
[தொகு] தென்னாபிரிக்கா
- Mini MS-803
[தொகு] தாக்குதல் வகைகள்
க்ளைமோர் கண்ணிகளை பயன்படுத்தி செய்யப்படும் தாக்குதல்கள் இரு வகைப்படும்
[தொகு] கட்டுப்பாட்டு நிலை தாக்குதல்
இவ்வகை தாக்குதல்களின் போது இலக்கு அல்லது எதிரி அபாய எல்லைக்குள் வந்ததும் மனிதமுறையாக கண்ணிவெடியை இயக்கி வெடிக்கச்செய்வதாகும். இதன்போது மின்சாரம் மூலம் அல்லது வேறு வழிகள் மூலம் மனித முறையாக கண்ணி வெடிக்க வைக்கப்படுகிறது.
[தொகு] கட்டுப்பாடற்ற நிலைத் தாக்குதல்
இது பாதிக்கப்படுவோரால் ஆரம்பிக்கப்படும் தாக்குதலாகும். எதிரி அபாய எல்லைக்குள் வந்ததும் ஏதாவதொரு வகையான தானியங்கி முறை மூலம் கண்ணிவெடி தானாக வெடிப்பதாகும். இதன்போது எலிப்பொறி முதல் கீழ்ச்சிவப்புக்கதிர்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.