கிளமிடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிளமிடியா ஒருவகைப் பக்றீறியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
[தொகு] அறிகுறிகள் - ஆண்களில்
- சிறுநீர் வழியினூடாக நீர் போன்ற அல்லது சீழ் போன்ற திரவம் வெளியேறல்
- சிறுநீர் கழிக்கும் போது எரிவு
- விதைப்பையில் வலி
[தொகு] பாதிப்புக்கள்
கிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்திலேயே ஆரம்பிக்கும். சரியாகவும் உடனடியாகவும் சிகிச்சை செய்தால் குணமாக்கலாம். தொற்று பாலோப்பியன் குழாய்களைச் சென்றடைந்தால் பாலோப்பியன் குழாய்கள் தடைப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படலாம். பாலோப்பியன் குழாயில் கரு உருவாகவும் கூடும். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தைக்குக் கடத்தப்பட்டு அதற்கு கண்ணோய் அல்லது நுரையீரல் அழற்சி ஏற்படக் கூடும்.